திரிந்த பாலென பார்வை.

உரோம வேர்களின் ஒளிகள்.

ஆழத்தில் பிறக்கும் நீர் குமிழ்கள்.

அந்தங்கள். அந்தங்கள். அந்தரங்கங்கள்.

நாக்குகள் பிறழும் சத்தங்கள் எழுப்ப எழுப்ப

இடையில் இடிகளும் குறுக்கிட

பச்சை நரம்பொன்றை பிரித்து உறித்து

பிரட்டியப்பின் பொருத்தி

திரிந்த பாலை ஓட செய்யபடும்.

சிப்பிகள். சிப்பிகள். பறக்கும் சிப்பாய்கள்.

மேடு பள்ளங்கள் மீது தேய்த்து அதை கரைத்து

உறைந்த விண்கற்கள் மெருகேற்ற.

உரோம பெருவெளியில் புதைக்க

பல விண்மீன்கள் உதிர்க்கப்பட்டது.