ஓடும் கணங்களில் உற்று நோக்குவாயாக.

அதில் உன் நிழல்கள் தெரிய

நிழல்கள் உன் நிஜத்தை உணர்த்த

நிஜங்கள் நிழல்களில் மட்டுமென புரிய

நிழல்களின் உரு திரிய

நிஜங்களின் தோற்றம் துகள்களாய் பிரிய

துகள்களை சேர்க்க நீ ஓட

சூரியோதயங்களிலும்

அஸ்தமணங்களிலும்

நீ

கரைவாயாக.