தன் காலத்தை விஞ்சாத செயல்களையும் சிந்தனைகளையும் கொண்டவன் என்பதில் வருத்தம்.

புரிதலுக்குப் பின் புறக்கணிப்பு என்று அகன்று புறக்கணிப்பையே நிலையாய் கொள்வதில் வருத்தம்.

உணர்வுள்ள தத்துவங்கள் கொள்ளாது ஆதாயமும் அங்கீகாரமும் தரும் தத்துவங்களை தேடுவதில் வருத்தம்.

பலவீனத்தை பழி சொல்லி தருக்கங்களின் தோல்விகளை ஏற்றுக்கொள்வதில் வருத்தம்.

அறியாமை என்றோன்று இல்லை என்று சொல்லி அதை கண்டதும் சீற்றமும், தன்னில் உணர்ந்ததும் ஏமாற்றமும் பெறுவதில் வருத்தம்.