கதைகளின் வித்துக்கள் மிதந்து கொண்டிருந்தன. பெருவெளியின் கூறுகள் பிடிமானமின்றி மிதந்து கொண்டிருந்ததில் நிதானமின்றி திருடிவிட்டேன். கூடாது என்பதற்கு காரணமில்லாததால் திருடிவிட்டேன்.
- நோய்த்தொற்று -
உலகம் பரிசுமூட்டை. மிதக்கும் அங்கங்களின் பெருமுடிச்சு.
நிதானம் மரணப்படுக்கை. நேரத்தின் பிடியில் நாம்.
நிகழ்ச்சிகள் எச்சம். அத்தினத்தின் அப்போதைய பகுதி.
- களவு -
இவ்வத்தியாயங்களின் இருப்பின் அர்த்தம்? கடத்தப்படும் கதைகளாய் இருக்கட்டும்.
பார்த்தேன். பார்க்க முடிந்தது பார்த்தேன். பார்த்தேன். திருடினேன்.
திருட்டின் பயனாய் கடத்தப்பட்டவை இன்பம். ஆக்கத்தின் பயனாய் பார்க்கப்பட்டவை இன்பம். பார்த்ததன் பயனாய் சபிக்கப்பட்டது இன்பம்.
- கதைகளின் வித்துக்கள் -