நிகழ்காலம் இறந்து கொண்டிருக்கிறது.
உன் பலம் அனைத்தும் முறியடிக்கப்படுகின்றன.
தொடுவெளியின் பயன்பாட்டிற்கான சில சுமைகள் கூடிவிட்டன. புதைக்கப்பட்டிருப்பவனவும் சுமந்துகொள்ள படுகின்றன
முற்றுப்புள்ளியை தொட்டுவிட்டாய். போதும். போதும். போதும்.
ஒரே கேள்வி பலமுறை பதிலளிக்கப்படுகிறது. அதை உமிழும் உடலும் பழுதாகிக்கொண்டிருக்கிறது.
'நீ யார்?'
பதில்கள் புதைக்கப்பட்டிருக்கவேண்டும். நடக்க தொடங்கினால் தூரம் பெருகும்.
கவலை வேண்டாம்.
அடுத்தமுறை அதே கேள்வி துளிர்க்கயில் புது பதில்களின் புது வேர்கள் புதைத்தயிடத்தை தொட்டிருக்கும்.
... ... ...
நிகழ்காலம் இறந்து கொண்டிருக்கிறது.