ஆகச் சிறந்த பொய்கள் எங்கே?

மெய்கள் தான் எங்கே?

இறக்கைகள் காற்றில் விரிய

இரைச்சல்கள் காற்றில் விரிய

மொழி எங்கே பொருந்தும்?

திரிபு நிலை தவிர்த்த மொழியின் அலங்காரம்?

நாக்குகள், நாள், திசை, பிரதிகள் பிறழுகின்றன.

அறிவுகள் மற்றும் வெளிப்பாடுகள் பிறழுகின்றன.

வேறுபடும் அறிவுகளின் கரு எங்கே?

அறிவு பண்புகளின் அவலங்கள் எங்கே?

நினைவுகளும் பிறழுகின்றன.

அத்துடன் கருத்தாக்கங்கள் மௌனிக்கின்றன.

Then in the darkest void;

They speak our loudest voices.