இரண்டு நாட்கள் நடந்து கொண்டிருந்தான்.

இருபுறமும் நகங்களின் சிலைகள்.

பளிச்சிடும் நகங்கள் அவை.

ஒற்றை மரம் பற்றியெரிந்து பூத்துக்கொண்டிருகிறது.

பூத்ததும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

வெடிப்பின் வெப்பத்தை மட்டும் பொருக்கிக்கொண்டான்.

ஒற்றை நூலிலே தான் மையல்.

ஒற்றை நூல் மட்டுமே தான் பிடித்தம்.

சில நாள். சில நூல்.

ஒரு நாள் கனத்தை பிரித்து இருப்பதை தொகுத்தான்.

ஒரு நாள் பசியை பிரித்து இருப்பதை தொகுத்தான்.

ஒரு நாள் இளமையை பிரித்து இருப்பதை தொகுத்தான்.

நூல்கள் முறுக்கிக்கொண்டு கயிறாகுமென கனவிலும் காணவில்லை.