துண்டிக்கப்பட்ட உடல் நெளிந்து கொண்டேயிருந்தது.

நெளிய நெளிய பறந்தது தங்க துகள்கள்.

ஏந்தல் - வாழ்வு - கருணை

துண்டிக்கப்பட்டது எத்தனை நிஜமோ

துடிப்பது அவ்வளவும் உண்மை.

வாடை எத்தனை நிஜமோ

துர்நாற்றம் அவ்வளவும் உண்மை.

அழுகல் எத்தனை நிஜமோ

கருணை அவ்வளவும் உண்மை.

வாழ்வு எத்தனை நிஜமோ

ஏந்தல் அவ்வளவும் அதில் உண்மை.

பாம்பின் உடல் தலையை தேடுவதேயில்லை.

தலை தனையும் வாழ்வு தேடுவதில்லை.