கழிப்பறையில் உள்ளே நுழையும் போதே தண்ணீர் குழாய்களை சிறிதாய் திறந்துவிட்டு சொட்டும் தண்ணீர் சப்தம் துணையிருக்கும் என யோசித்தவன் யார்?
கண்டெடுத்த கல்லில் மண்ணை துடைத்து அதை மேலும் சட்டையில் தேய்த்து பளிச்சிட செய்து பிரிய மனமில்லாமல் பையில் வைத்து நேரத்தோடு ஓட சில நாள் கழித்து அது தொலைந்ததை எண்ணி வருத்தப்படுபவள் யார்?
பொழுது விடியும் நேரத்தில் வளர்ந்த வேரில்லாத கேள்வியை சிரமத்துடன் சுமந்து அன்றாடத்தை விட்டு விலகியே மிதந்து பின்னர் கேள்வி கரைந்துவிட பூமியில் கால்பட வருந்தியவள் யார்?