சன்னமான காகித நோட்டை மறந்துகொண்டே வருகிறேன்.

மையை கொட்டும் கருப்பு gel பேனாவும் தான்.

ஊரும் காகிதம் பெரும் அபத்தங்களிடம் தப்புகிறது.

அந்த நீள்சதுரங்களும், கோடுகளும்,

புள்ளிகளும் கிறுக்கப்படுவது குறைந்துவிட்டது. .

ஒழுக்கம் உணவு பழக்கம் போலாகிவிட்டது.

ஒருவேளை தின்றதும்

அடுத்தவேலை போதுமென்றாகிவிடுகிறது.

புறக்கணிக்கப்பட்ட கட்டிடத்தில்

பூட்டப்பட்ட அறையாகியது கவிதை எழுதுவது.

தெரியாமல் மனுஷ்யபுத்திரனை படிக்கிறேன்.

சிக்கல்.

ஓடும் நாட்களில் ஒட்டிக்கொண்ட சிக்கல்.

சிரமமான சிக்கல் இல்லை.

சிக்கல் சிக்கல் மட்டுமே.