இந்த தலைப்புகளில் உலாவும் சிந்தனைகள் நேர்மையை தவிர்க்கின்றன.
நிஜம் நேர்மையை புறந்தள்ளுகிறது.
கனாவில் நேர்மை பொருந்த மறுக்கிறது.
பிறழ்வது நிஜமும் கனாவுமே தவிர நேர்மைக்கு இடமில்லை.
அகமல்லாததில் நேர்மை எப்படி பொருந்தும்?
அதன் வியாக்கியானங்கள் வெறும் சலிப்பூட்டும் முரண் குவியல்.
பொருந்துமெனில் சுற்றார் அனுமதி இல்லை.
அனுமதியின்மைக்கு நியாயமும் இல்லை.
சுற்றார் அனுமதி கிடைத்தால் மட்டும்?
நிஜம் - கனா - பிறழ்வு.