மலையுயர அரண்முலா கண்ணாடி.
உயரத்தில் பாதி அகலம்.
இவள் ஏறுவாள். எறும்புகளும் ஊரும்.
இவள் நாலு கால்களில். எரும்புகளுக்கு ஆறு.
காற்றில் மங்கா ஒலிகள் ஒலித்தன.
வெளிகளின் தீவிரம் எது?
உஷ்ணத்தின் தீவிரம் எது?
தாதுக்களின் தீவிரம் எது?
இத்துடன் கணித நிகழ்வுகள் முற்றும்.
முற்றியப்பின் தோற்றம்.
மலையுயர கண்ணாடி நடுவில் பூச்சிதறல்கள்.
மகரந்தங்களோ விதைகளோ தேவைபடுவதில்லை.
பூவிதழ்களை பிய்த்து தைத்து கோர்த்தவையே இப்போதைக்கு பூ.
இப்போது எது பிம்பமாகும்?
உயரம் ஏறி பூக்களை பார்க்கும் கண்களை
பிம்பங்கள் எப்படி துளைக்கும்?
உண்மையின் தீவிரம் எது?