நேற்றை எழுதி தீர்த்தாகிவிட்டது.

அப்போதே அதன் மறுபிறப்பு.

அகலமான நோட்டுகள் வாங்கி குவிக்கப்பட்டன.

கவிதையை வடிக்க அகலம் தேவைப்படுகின்றன.

எழுத்தின் பள்ளங்களில் வீரிய சுனை.

எரிக்குழம்புகள் சுனைந்து கொண்டிருந்தன.

காகித பள்ளங்களில் கண்கள் உற்று பார்த்தன.

ஏன்?

ஏன் காகிதம் நெருப்பில் ஊறிக்கொண்டிருக்கிறது?

ஏன் சலிப்பின் அமிலம் கசந்துக்கொண்டேயிருக்கிறது?

ஏன் இருப்பதின் கனம் கணிக்கப்படுகிறது?

காகிதம் எவ்வாறு தாங்கும்?