ஒருத்தன். இல்லை. ஒருத்தர். துருப்பிடித்தப் பகலை தேய்த்து பளபளக்கச் செய்துகொண்டிருந்தார்.

சில. இல்லை. பல. நாய்களும் அணில்களும் அழுக விடுமாறு சாலையில் யாசகம் செய்துகொண்டிருந்தன.

வெளுத்த பகல்கள் என்ன செய்யும்? இறந்த நாய்கள் தான் என்ன செய்யும்? இனிப்புகள் இனிமைகள் பித்தலாடங்களோ? ஏக பிரதிநிதித்துவம் எப்போது மறையும்? எப்போது தோன்றின?

இருபது. இல்லை. இருபது இலட்ச இரவுகள்.